சென்னை, திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, குடிநீர் பாதுகாப்பு வாரத்தையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, எல்இடி திரை வசதி கொண்ட மூன்று வாகனங்கள் வாயிலாக மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் அவர் பார்வையிடுகிறார்.
அதனைத் தொடர்ந்து, தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் நீரின் தரத்தை, முதலமைச்சர் முன் சென்னை குடிநீர் வாரிய அலுவலர்கள் பரிசோதித்துக் காட்ட உள்ளனர்.
இதையும் படிங்க:உணவுக் கழிவிலிருந்து மின்சாரம்: பிரதமர் மோடியின் பாராட்டு மழையில் சிவகங்கை ’காஞ்சிரங்கால்’ கிராம மக்கள்!