தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்காக கட்டப்பட்ட விடுதிக் கட்டடங்களை திறந்துவைத்த ஸ்டாலின்

ஆதிதிராவிடர் மாணவர்கள், பணிபுரியும் மகளிருக்காக ரூ. 10.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

By

Published : Aug 30, 2021, 3:28 PM IST

cm-stalin-inaugurated-hostels-for-sc-st-student-and-working-women-worth-10crore-rupees
எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்காக கட்டப்பட்ட விடுதிக் கட்டடங்களை திறந்துவைத்த ஸ்டாலின்

சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோவை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மாணவர்கள், பணிபுரியும் மகளிருக்காக கட்டப்பட்ட விடுதிக்கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சிவாயிலாக திறந்துவைத்தார்.

மாவட்டம்விடுதிகட்டப்பட்டுள்ள இடம்யாருக்கான விடுதிமதிப்பீடு
கோவை கோவை நகர் பகுதி மகளிர் தங்கும் விடுதி ரூ. 1.10கோடி
மயிலாடுதுறை தில்லையாடி பள்ளி மாணவ, மாணவியர் விடுதி ரு.1.32 கோடி
விருதுநகர் சோழபுரம் கல்லூரி மாணவியர் விடுதி ரூ. 1.14 கோடி
திருநெல்வேலி திருநெல்வேலி நகர்ப்பகுதி பள்ளி மாணவர் விடுதி ரூ. 1.25 கோடி
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி நகர்ப்பகுதி தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதி ரூ.1.25கோடி

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என் கயல்விழி செல்வராஜ் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:மழைநீர் சேகரிப்பு, குடிநீர் பாதுகாப்பு வாரம்: விழிப்புணர்வு வாகனத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details