சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரவு செலவு திட்ட அறிக்கை கூட்டத்தொடரில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று தொடங்கி நடந்து வருகிறது.
விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று (ஆக.24), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது
அப்போது, நகராட்சி வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 100 நாளில் செய்துள்ள சாதனைகளை அனைவரும் பாராட்டுகின்றனர்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் நாட்டில் உள்ள முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதல்வராக இருக்கிறார். அகில இந்திய அளவிலான பத்திரிக்கைகள் மட்டும் இல்லாமல், ரஷ்யா. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள பத்திரிக்கைகளும் கூட அவரது செயல்பாடுகளை பாராட்டுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது இந்திய அளவில் பிரதமராக கூடிய எல்லாத் தகுதியும் உடையவராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திகழ்கிறார் என்றார்.
மேலும் நகர்பற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ரு. 100 கோடி மதிப்பில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் என்ற திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களிலும், ஏனைய மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலங்களில் செயல்படுத்தப்படும். இதேபோல், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒரு நகராட்சி என 7 நகராட்சிகள் 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சி வீதம் 37 பேரூராட்சிகளிலும் இத்திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் என அமைச்ர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிங்கார சென்னை 2.0 : பணிகள் குறித்து அரசு விளக்கம்!