சென்னை,உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை கவரும் வகையில், கோர்டெலியா குரூஸ் நிறுவனம் சொகுசு கப்பலை உருவாக்கியுள்ளது. கோர்டெலியா குரூஸ் சொகுசு கப்பல் உணவகங்கள், நீச்சல் குளம், பார், திறந்தவெளி சினிமா திரையரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், ஜிம்னாசிசம் போன்ற ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் வரை முதற்கட்டமாக வாரத்தில் இரண்டு நாட்கள் பயணிகளை ஏற்றிச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.