சென்னை:மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 20) தலைமைச் செயலகத்தில், சதுரங்கப் போட்டியில் 2019ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம், 2022ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் பரத் சுப்ரமணியனுக்கு எட்டு லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
சென்னையில் 9ஆம் வகுப்பு படித்துவரும் பரத் சுப்ரமணியன் 2013ஆம் ஆண்டுமுதல் தனது ஐந்தாவது வயதிலிருந்து மாநில, தேசிய, சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்றுவருகிறார். சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்று சிறப்பாக விளையாடிய பரத் சுப்ரமணியன் 2019ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றார்.
மேலும், 2022ஆம் ஆண்டில் தனது 14ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.