சென்னை: கடலூர் மாவட்டம்,மானடிகுப்பம் கிராமம், தெற்குத்தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் கடந்த 24ஆம் தேதியன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற புறங்கணி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்ற விமல்ராஜ் (21) விளையாடிக்கொண்டிருந்தபோதே எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
இதனையறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடிக்கொண்டிருந்தபோது இளைஞர் உயிரிழந்த செய்தியைக்கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.