தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரம்.. அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு! - DMK Files

சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 10, 2023, 3:49 PM IST

Updated : May 10, 2023, 4:39 PM IST

சென்னை:திமுகவினரின் சொத்துப் பட்டியல், ரபேல் வாட்ச் தொடர்பான விவரங்கள் உள்ளிட்டவற்றை சில தினங்களுக்கு முன்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டார்.

அதில், திமுக அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என். நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களையும் வெளியிட்டார்.

அண்ணாமலை வெளியிட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று திமுக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அண்ணாமலை பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும்; இல்லையென்றால் 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பினார். அதேபோல், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டப் பல திமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பாக அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், தமிழ்நாடு திட்டங்கள் மற்றும் துபாய் சென்ற முதலமைச்சரின் பயணத்தை தவறாக விமர்சனம் செய்தது, முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

அவதூறான கருத்துகளை வெளியிட்ட அண்ணாமலை மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 499 மற்றும் 500ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்து நீதிபதி உமா மகேஸ்வரி வழக்கை, 8 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:Karnataka Assembly Election: கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல்; பிரபலங்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

Last Updated : May 10, 2023, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details