சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 9) காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாகவும், இதனால் இளைஞர்கள், மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "ஒரே ஆண்டில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 396 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்துள்ளோம். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் 1 லட்சத்து 95 ஆயிரம் கிலோ குட்கா மட்டுமே பறிமுதல் செய்யபட்டுள்ளது.