தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தங்கப் பதக்கம் வென்று வாருங்கள்’ - மகளிர் ஹாக்கி அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து - அண்மை செய்திகள்

சென்னை: ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

STALIN
STALIN

By

Published : Aug 2, 2021, 12:42 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னேறி அசத்தியுள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்து இந்திய மகளிர் ஹாக்கி அணி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் ஹாக்கி அணியை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்

அதில், ”ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வெற்றியால் நான் அகமகிழ்ந்துள்ளேன். இதேபோல் இறுதிச் சுற்றுக்கும் முன்னேறி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல மகளிர் அணிக்கு எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:புகழ் சேர்த்த இடத்தில் கருணாநிதியின் பொன்னோவியம் - நெகிழும் வைரமுத்து

ABOUT THE AUTHOR

...view details