தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகர் கேப்டன்’ - முதலமைச்சர் வாழ்த்து

தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகர் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய்காந்த்
விஜய்காந்த்

By

Published : Aug 25, 2021, 11:04 AM IST

நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்று (ஆகஸ்ட் 25) தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதனையொட்டி இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த் - மு.க.ஸ்டாலின்

ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் விஜயகாந்த், இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக தன்னை யாரும் பார்க்க வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தேமுதிக நிறுவனரும், தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த், நீண்ட நாள்களுக்கு உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

HBD விஜயகாந்த் - தத்தளித்த தமிழ்த் திரையுலகைக் காத்த கேப்டன்

ABOUT THE AUTHOR

...view details