சென்னை: பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சிற்பி' திட்ட நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடி சான்றிதழ்களை வழங்கினார். சிற்பி திட்டத்தில் பயிற்சி முடித்த 5,000 மாணவ, மாணவியர்களுக்கு இன்று ஸ்டாலின் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற 'சிற்பி' நிறைவு விழாவில் கலந்துரையாடி அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளிடம் பேசிய முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் இருக்கிறேன்: நீங்கள் செய்வீர்களா? என சிரித்துக்கொண்டே பேசினார். பின்னர் சிற்பி கீதம் என்று சிற்பி திட்ட மாணவ, மாணவியருக்கான பாடலையும் வெளியிட்டு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி, மாணவர்கள் ஒழுக்கத்திலும் கல்வியிலும் மேலும் சிறந்து விளங்கிடவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழிப்படுத்தவும், 'சிற்பி' (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் காவல்துறையுடன், பள்ளி மாணவர்களின் நெருக்கத்தை வளர்த்து நல்லுறவை ஏற்படுத்தி, சட்டத்தை மதிக்கும் சிறந்த குடிமக்களாகவும், காவல்துறையின் உண்மையான நண்பர்களாக மாற்றும் உயரிய நோக்கில் “சிற்பி” திட்டம் தொடங்கப்பட்டது உன்னதமான, சிறந்த இளைய சமுதாயத்தினரை உருவாக்கிட அரசுப் பள்ளிகளை சேர்ந்த 2,558 மாணவிகள், 2,442 மாணவர்கள் என 5,000 பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு“சிற்பி” (SIRPI) திட்டம் உருவாக்கப்பட்டது. மேலும் 12 காவல் துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு பள்ளிக்கு இரண்டு நோடல் ஆசிரியர்கள் வீதம் நியமிக்கப்பட்டு, சிற்பி திட்ட மாணவ, மாணவியருக்கு கல்வி, ஒழுக்கம், பொது அறிவு, கல்வி சுற்றுலா என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
சிற்பி திட்டத்தின் மூலம், சிற்பி மாணவ, மாணவியருக்கு பாடத்திட்ட புத்தகங்கள், சீருடைகள் (2 எண்ணிக்கை) வழங்கப்பட்டு, 40 வாரம் பயிற்சி வகுப்புகள் மற்றும் 8 கல்விச் சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பயிற்சி வகுப்புகள் முடிக்கப்பட்ட நிலையில் சிற்பி திட்டம் நிறைவு பெற்றது.