தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இசை மன்றங்களில் தமிழர்களின் மரபு ஒலிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - TN CM inaugurates Music Academy conference

தமிழர்களின் இசை மரபு பழமையானது, செழுமையானது. அத்தகைய தமிழிசைப் பாடல்கள் மியூசிக் அகாடமி போன்ற இசை மன்றங்களில் ஒலிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மியூசிக் அகாடமியின் 96ஆம் ஆண்டு இசைவிழாவில் தெரிவித்தார்.

Etv Bharatமியூசிக் அகாடமி இசைக் கலை மகிழ்ச்சி அளிக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்
Etv Bharatமியூசிக் அகாடமி இசைக் கலை மகிழ்ச்சி அளிக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Dec 16, 2022, 7:32 AM IST

சென்னை மியூசிக் அகாடமியின் 96ஆம் ஆண்டு இசைவிழாவை நேற்று (டிசம்பர் 15) தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், "நான் ஆட்சிப் பொறுப்பேற்று எந்தவித பிரச்சனையில்லாமல், எந்தவித பரபரப்பும் இல்லாமல், ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால், எந்த டென்ஷனும் இல்லாமல், ஒரு நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால், அது இந்த நிகழ்ச்சிதான்.

இந்த நல்ல வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்திருக்கக்கூடிய மியூசிக் அகாடமியினுடைய நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டுதோறும் மார்கழி மாதம், அதாவது டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல. உலகம் முழுவதும் உள்ள இசைப் பறவைகளை சென்னையை நோக்கி வரவழைக்கக்கூடிய ஒரு வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், மக்கள் மனதையும், இந்த மாநிலத்தையும் பண்படுத்தும் கடமையை இது போன்ற இசைக் கலை மன்றங்கள் செய்து வருவது மிகப்பெரிய தொண்டு. மியூசிக் அகாடமி உள்ளிட்ட இசைக் கலை அமைப்புகளை ஏதோ பொழுதுபோக்கு அமைப்புகளாகச் சொல்ல முடியாது. அவை அனைத்தும் கலை வளர்க்கக்கூடிய பண்பாட்டு அமைப்புகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தக் கொள்கை ஏதோ அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல, அரசியல் கட்சிகள் மட்டும் வலியுறுத்துவதாக நீங்கள் சுருக்கி அதை நினைத்துவிடக் கூடாது. இதுபோன்ற கலை அமைப்புகளின் கொள்கையாக. ஒவ்வொரு தனிமனிதரின் கொள்கையாக மாற வேண்டும்; எதிரொலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் மியூசிக் அகாடமி போன்ற இசைக்கலை அமைப்புகளும், மன்றங்களும் தமிழிசைக்கு, தமிழ்ப்பாடல்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் இலக்கியத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்களும் இதுபோன்ற இசை மன்றங்களில் தவறாது ஒலிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சட்டசபையில் சீனியர் அமைச்சர்கள் வரிசைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details