கரோனா தொற்று காலத்தில் பல மாநிலங்களும் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், தொற்றுக் காலத்தில் களப்பணியாற்றிவரும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 காவலர்களுக்கு ஊக்கத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா பெருந்தொற்று உலக அளவில் மட்டுமல்ல இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் முதல், இரண்டாம் அலைகளின்போது காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர்.
இதனை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களது பணியை ஊக்குவிக்கும் விதமாகவும், காவல் துறையில் பணியாற்றிவரும் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 பேருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திடீர் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி நியமனம்!