சென்னை:டவ் தே புயலில் காணாமல் போன மயிலாடுதுறை, நாகை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
டவ் தே புயல்: காணாமல் போன மீனவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு - முதலமைச்சர்
![டவ் தே புயல்: காணாமல் போன மீனவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு CM Stalin Announces compensation to missing fishermen family](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11991382-thumbnail-3x2-stalin.jpg)
18:02 June 02
டவ் தே புயலில் காணமால் போன நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் மீன்பிடித் தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டவர்கள்.
காணமால் போன அவர்களை ஹெலிகாப்டர், கடலோர காவற்படையின் கப்பல் மூலம் தொடர்ந்து தேடிவந்தாலும், அவர்களை கண்டுபிடித்திட இயலாத நிலை உள்ளது. இந்தச்சூழ்நிலையில், காணமால் போன 21 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் என 4.2கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.