சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மூன்று சட்டக் கல்லூரிகளைத் தொடங்கவுள்ளோம்: முதலமைச்சர் பழனிசாமி - முதலமைச்சர் உரை
சென்னை: தமிழ்நாட்டில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் போல் மேலும் மூன்று பல்கலைக்கழகங்கள் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘மனுநீதி சோழன், சிபி சக்கரவர்த்தி போன்ற நீதிக்கு தலைவணங்கிய எண்ணற்ற மன்னர்கள் வாழ்ந்த நாடு நமது தமிழ்நாடு. தெற்காசியாவில் சட்டக் கல்விக்கென தோற்றுவித்த முதல் பல்கலைக்கழகம் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். ஆசியாவிலே குறைந்த கல்விக் கட்டணத்தில் சிறந்த சட்டக் கல்வியை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகம் போல் மேலும் மூன்று சட்டக் கல்லூரிகளை தொடங்கவுள்ளோம்’ என்று கூறினார்.