தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபிலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதியானதையடுத்து நிலோஃபர் கபில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அமைச்சர் நிலோஃபர் கபிலிடம் நலம் விசாரித்தார்.
அமைச்சர் நிலோபஃர் கபிலிடம் முதலமைச்சர் நலம் விசாரிப்பு - சென்னை கரோனா நிலவரம்
சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் நிலோஃபர் கபிலை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் பழனிசாமி நலம் விசாரித்தார்.
cm speak with nilofer kabil
மேலும், தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 4ஆவது அமைச்சர் நிலோஃபர் ஆவார். அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ ஆகிய மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் அன்பழகன் மட்டும் கரோனா சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பியுள்ளார்.