தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்மகன் உசேனுக்கு தந்தை பெரியார் விருது: முதலமைச்சர் வழங்கினார் - விருது வழங்கிய முதலமைச்சர்

சென்னை: அ.தமிழ்மகன் உசேனுக்கு தந்தை பெரியார் விருதினை முதலமைச்சர் பழனிசாமி வழங்கி கௌரவித்தார்.

thanthai periyar award
தந்தை பெரியார் விருது

By

Published : Feb 1, 2021, 10:36 PM IST

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ் அமைப்பிற்கும், ஊடகங்களுக்கும் என மொத்தம் 77 விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று (பிப்.1) வழங்கினார்.

திருவள்ளுவர் விருது பெறும் வைகைச்செல்வன்

விருது பெற்றவர்கள் விவரம்:

  1. 2021ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது - வைகைச்செல்வன் (தமிழ் வளர்ச்சித் துறை)
  2. 2020ஆம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது- வரகூர் அ. அருணாச்சலம்
  3. 2020ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது- அ. தமிழ்மகன் உசேன்
  4. 2020ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது- வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் தெரிவு செய்யப்பட்டது. அச்சங்கத்தின் தலைவர் கலைமாமணி முனைவர் வி.ஜி. சந்தோசம் விருதினை பெற்றுக்கொண்டார்.
  5. கபிலர் விருது -செ. ஏழுமலை
  6. உ.வே.சா விருது- கி . ராஜநாராயணன் சார்பாக அவரது பேரன் தீபனிடம் வழங்கப்பட்டது.
  7. கம்பர் விருது- மருத்துவர் எச்.வி. ஹண்டே
  8. சொல்லின் செல்வர் விருது- நாகை முகுந்தன்
  9. உமறுப் புலவர் விருது- ம.அ. சையத் அசன் ( எ ) பாரிதாசன்
  10. ஜி.யு.போப் விருது -ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முனைவர் உல்ரீகே நிகோலசு சார்பாக அவரது மகன் தேசிகனிடம் வழங்கப்பட்டது.
  11. அம்மா இலக்கிய விருது- முனைவர் தி. மகாலட்சுமி


இந்நிகழ்வில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

விருது பெற்றவர்கள்

இதையும் படிங்க:இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டினால்தான் விவசாயத்தை காக்க முடியும்- பத்மஸ்ரீ பாப்பம்மாள்

ABOUT THE AUTHOR

...view details