சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை சார்பில் விழுப்புரம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் 21 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிட, பழங்குடியின நலப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான 19 விடுதிக்கட்டடங்களை காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.
40.30 கோடி மதிப்பிலான கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர்!
சென்னை: ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 47 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான பள்ளிக் கட்டடங்கள், தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள் முதலியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இதைத்தொடர்ந்து திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிருக்கான விடுதிக் கட்டடம், திருவள்ளூர் மாவட்டம், வடகரையில் மூன்று கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம் முதலியவற்றை திறந்துவைத்தார். கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் 21 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிகளின் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், சுற்றுச் சுவர், கழிப்பறை, அறிவியல் ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றைத் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், ஆதிதிராவிடர்; பழங்குடியின நலத் துறை அமைச்சர் ராஜலெட்சுமி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், ஆதிதிராவிடர்; பழங்குடியின நலத் துறை முதன்மைச் செயலர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர், தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சஜ்ஜன்சிங் ஆர். சவான், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ரிட்டோ சிரியாக், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.