தமிழ்நாட்டில் இதுவரை கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து, தமிழ்நாடு கரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்தந்த மாநில அரசுகள் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதுகுறித்து பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், முதலமைச்சர் ழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் கரோனா தடுப்பு பணி குறித்து ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது, பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.