தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் சொல்லி விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி - விவசாயிகளின் வலியறிந்து தான் பயிர்கடன் தள்ளுபடி

சென்னை: ஸ்டாலின் சொல்லி நான் விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை; நான் விவசாயி, விவசாயிகளின் வலியறிந்து தள்ளுபடி செய்தேன் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

edappadi palanisamy
edappadi palanisamy

By

Published : Feb 7, 2021, 6:54 PM IST

சென்னை திருவேற்காட்டில் தனியார் கல்லூரி வளாகத்தில் அதிமுக இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழிநுட்பப் பிரிவு நிர்வாகிளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், "ஸ்டாலின் போகும் இடமெல்லாம் நான் சொன்னதைத்தான் முதலமைச்சர் செய்துவருவதாக கூறி வருகிறார். நான் விவசாயி; விவசாயிகளின் வலியறிந்துதான் பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளேன். அவர் சொன்னதால் இல்லை. அதிமுக அரசு சொன்னதை செய்துள்ளது சொல்லாததையும் செய்துள்ளோம்.

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திமுக பொய் பரப்புரைகளை செய்து வருகின்றது. அதனை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முறியடிக்க வேண்டும். மக்களின் குறை தீர்க்கும் எண்ணாக 1100 இன்னும் ஓரிரு வாரங்களில் அறிமுகம் செய்யவுள்ளோம். இதன்மூலம் மக்கள் எங்கிருந்தும் நேரடியாக என்னிடம் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அந்த குறைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக சரி செய்யப்படும்" என உறுதியளித்தார்.

இதையும் படிங்க:100 விழுக்காடு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details