தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: எம்எல்ஏ பழனியின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் நலம் விசாரிப்பு! - MLA Palani confrims corona

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் பழனியிடம் முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

எம்எல்ஏ பழனி
எம்எல்ஏ பழனி

By

Published : Jun 14, 2020, 12:39 PM IST

கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி பழனி, கடந்த 12ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தி அறிந்தவுடன் எம்எல்ஏ-வின் உடல்நிலை குறித்து அவரது மகன்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரித்து அறிந்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பழனிக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறு அறிவுறுத்தினார்.

கடந்த ஜூன் 13 ஆம் தேதி எம்எல்ஏ பழனியின் மகன் செல்வத்திடம் பழனியின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்த பின்னர் அதற்கடுத்த நாள் மற்றொரு மகனிடமும் முதலமைச்சர் பேசினார் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இன்று காலை 10 மணியளவில் எம்எல்ஏ பழனியிடம் தொலைபேசியில் முதலமைச்சர் பேசினார். உடல்நிலையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறுக் கூறி தேற்றியுள்ளார். பின்னர் மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளேன், கவலை வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதற்கு மறுமொழியாக சட்டப்பேரவை உறுப்பினர் பழனி, தான் நலமாக இருப்பதாக தெரிவித்ததுடன், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details