நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பரவலின் தீவிரம் குறையாத நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை (ஆகஸ்ட் 11) ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
கரோனா பாதிப்பு: பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை! - கரோனா பாதிப்பு குறித்து நாளை முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்
சென்னை: தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் கரோனா பாதிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி நாளை (ஆகஸ்ட் 11) ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
Tamilnadu cm palanisami
அதன்படி நாளை காலை 10:30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.