தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைத் திருமண முறையை முடிவுக்கு கொண்டுவர முதலமைச்சரின் நடவடிக்கை! - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: குழந்தைத் திருமண முறையை முடிவுக்குக் கொண்டுவருதல் தொடர்பாக 23 புத்தகங்களை முதலமைச்சர் பழனிசாமி வெளியி்ட்டார்.

cm palanisamy
cm palanisamy

By

Published : Oct 28, 2020, 5:53 PM IST

முதலமைச்சர் பழனிசாமி குழந்தைத் திருமண முறையை முடிவுக்குக் கொண்டுவருதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, யுனிசெஃப் அமைப்பின் நிதியுதவியுடன், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் மாநிலக் கருவூல மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட 23 புத்தகங்கள் அடங்கிய இளந்தென்றல் தகவல் தொடர்பு கையேடுகளை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், பெரம்பலூர், சேலம், விருதுநகர், தேனி உள்ளி்ட்ட ஏழு மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன. குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சமூக நலத் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இது குறித்து ஆசிரியர்கள், பஞ்சாயத்துத் துறை மற்றும் முன்னணிக் களப்பணியாளர்கள் போன்றவர்களுக்குப் பயிற்சியளிக்க இந்தக் கையேடுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை பரிசீலனை செய்ய உத்தரவிடக்கோரி மனு!

ABOUT THE AUTHOR

...view details