இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்படி, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
இதையேற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 18) முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.