இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தாம்பரம் வட்டம், சேலையூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் செல்வன் சதிஷ் என்பவர் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், போடிப்பேட்டையைச் சேர்ந்த நதியா, அவருடைய மகள்கள் செல்வி நவிதா, செல்வி அஸ்வினி ஆகிய மூன்று பேரும் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
சாலை விபத்து, நீரில் மூழ்கி உயிரிழந்த 23 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி - முதலமைச்சர் உத்தரவு - முதலமைச்சர் பழனிசாமி செய்தி குறிப்பு
சென்னை: சாலை விபத்து , நீரில் மூழ்கி உயிரிழந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி
சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 166 படகுகள் கரை திரும்பியுள்ளன - அமைச்சர் ஜெயக்குமார்