தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
‘முதலமைச்சர் அல்லது அமைச்சர் பதவி விலக வேண்டும்’ - கே.எஸ் அழகிரி! - resign
சென்னை: தண்ணீர் பிரச்னைக்கு முதலமைச்சர் அல்லது அமைச்சர் யாராவது ஒருவர் பொறுப்பேற்று பதவி விலக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "தமிழ்நாட்டில் நிகழ்ந்து வரும் குடிநீர் பிரச்னையை தமிழ்நாடு அரசாங்கம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. அவர்களுக்குள் ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்று பேசி வருகின்றனர். அதனால், தமிழ்நாடு காங்கிரஸ் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து மழை நீர் சேமிப்புத் திட்டம் செயல்படுத்த உள்ளோம், ஏரி, குளங்களைத் தூர் வார உள்ளோம். ஏனெனில் விமர்சனம் மட்டும் வைக்காமல் நாங்கள் பணி செய்ய விரும்புகின்றோம். தமிழ்நாடு அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்னைக்கு முதலமைச்சர், குடிநீர் வடிகால் வாரிய அமைச்சர் ஆகியோர் பொறுப்பை ஏற்று யாராவது ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.