கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வையும் நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மே 3ஆம் தேதி தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில், கரோனா அதிகரித்து வந்ததால், தேர்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பிளஸ் டூ தேர்வு எப்போது? - முதலமைச்சர் ஆலோசனை - mk stain
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.
பிளஸ் டூ தேர்வு
இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.