சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாதம்தோறும் உரிய அளவில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய நீர்வள துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,’காவிரி டெல்டா, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் டெல்டாவின் உயிர்நாடி.
இந்த ஆண்டு, டெல்டா விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா பயிர்களை சாகுபடி செய்ய காத்திருக்கும்நிலையில், டெல்டா நீர்ப்பாசனத்திற்கான நீர்த்தேக்கத்தை ஜூன் 12ஆம் தேதி சாதாரண தேதியில் திறக்க திட்டமிட்டுள்ளோம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாதம்தோறும் உரிய அளவில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.
மேலும் தென்மேற்கு பருவமழையிலிருந்து டெல்டா அதிகம் பயனடையவில்லை என்பதால், நீர்த்தேக்கத்திலிருந்து தொடர்ந்து நீரை வெளியேற்றுவதைப் பொறுத்து, கால அட்டவணையின்படி நீர் வெளியிடுவதில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால் பயிரை கடுமையாகப் பாதிக்கும்.