தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மறுநாள் சந்திக்கிறார்.

பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Aug 14, 2022, 3:28 PM IST

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 16) டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஸ்டாலின் புதிதாக தேந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் இரண்டு போரையும் சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் இந்த மாதம் 10- ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு பண்புகள் ஆகும். தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இது போன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ள நிலையில், இந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க ஆளுநரை அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க:சென்னையிலிருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தாமதம்

ABOUT THE AUTHOR

...view details