சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில், நேற்று (ஜூன் 15) முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2ஆவது தவணை கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுவருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.யு.சி.எஸ் நியாயவிலைக் கடையில் இன்று (ஜூன் 16) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
நிவாரணம் வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வின்போது, பொதுமக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை, மளிகைப் பொருள்கள் தொகுப்பு எவ்விதத் தடையும் இல்லாமல் வழங்கப்படுகிறதா என்பதை ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு கரோனா நிவாரண நிதியை வழங்குவதி ஏதேனும் சிக்கல் உள்ளதா என்பதையும் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டார். முதலமைச்சரின் இந்தத் திடீர் ஆய்வு அப்பகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் பேருந்து சேவை?... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை