சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய்’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - சென்னை மாவட்ட செய்திகள்
தாய் மொழி, தாய் நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய் என அன்னையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.
அன்னையர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்நாளில் பலரும் தங்களது தாய்க்கு வாழ்த்து தெரிவித்து, பரிசுப் பொருள்களும் வழங்குவர்.
இந்நிலையில் இன்று (மே.09) சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “தாய்'மொழி, தாய் நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய்.
பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு. எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள். மகளிர் நலத்துடன், அன்னையர் நலனையும் தமிழ்நாடு அரசு காக்கும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.