இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மக்களவை நடைமுறைகளைப் புறக்கணித்து, அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கி, இன்றுடன் (மே 26) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது.
இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை, உணர்வுகளை மதித்து 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு இதுவரை முன்வரவும் இல்லை, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை என்பது கவலையளிக்கிறது.