சென்னை:நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல், தொடரும் திமுக-பாஜக மோதல், முற்றும் இந்தி மொழி பிரச்சாரம், தொடர்ந்து நடைபெறும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகள், ஆர்ப்பரிக்கும் ஆளுநர் விவகாரம், அதிமுகவால் வலுவாக முன் வைக்கப்படும் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை என்ற பல்வேறு சிக்கல்கள், சவால்கள் என சூழ்ந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலை மின்னஞ்சல் வாயிலாக பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இதனையடுத்து, இதற்கான பதிலை முதலமைச்சர் ஸ்டாலின், தனது பணிக்கு மத்தியில் ஈடிவி பாரத் ஊடகத்திற்காக பிரத்யேகமாக அளித்திருந்தார். இதனையடுத்து, இந்த முதலமைச்சர் ஸ்டாலினின் பிரத்யேக செய்தி, ஈடிவி பாரத் ஊடகத்தின் வாயிலாக தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, ஒடியா மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் வெளியாகி நாடெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.