தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொது சொத்துகளை விற்பது தேச நலனுக்கு எதிரானது - மு.க. ஸ்டாலின் - privatization of public property

பொதுத்துறை நிறுவன சொத்துகளை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்

By

Published : Sep 2, 2021, 1:12 PM IST

Updated : Sep 2, 2021, 4:59 PM IST

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை காங்கிரஸ் செல்வபெருந்தகை, ராமசந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

பொது சொத்துகளை விற்பது தேச நலனுக்கு எதிரானது

இதுகுறித்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், "நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் நமது அனைவரின் சொத்து. லாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், மக்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் பொது சொத்துக்களை விற்பது தேச நலனுக்கு உகந்தது அல்ல.

பொருளாதார நலனுக்கும் சிறு,குறு தொழிலுக்கும் ஆணி வேராக பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்றிய அரசு பொது சொத்துக்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன்" என கூறினார்.

பொது சொத்துகளை விற்பது தேச நலனுக்கு எதிரானது

இதையும் படிங்க:சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

Last Updated : Sep 2, 2021, 4:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details