சென்னை: குமரிக் கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியால் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழையானது கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், பலர் அவர்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த மாவட்டங்களில் நேற்று முன்தினம் (டிச.21) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இம்மாவட்டங்களில் நிவாரணப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது X சமூவ வலைதளப் பக்கத்தில் கூறியதாவது, “பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதி செய்திட, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.