தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பங்காரு அடிகளார் மறைவு; முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி! - Bangaru Adigalar history in tamil

CM MK Stalin: மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 9:55 AM IST

Updated : Oct 20, 2023, 10:53 AM IST

மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

சென்னை: செங்கல்பட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் ஆன்மீக குருவான பங்காரு அடிகளார் நேற்று (அக்.19) உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. இதனையடுத்து, அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.20) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, தா.மோ.அன்பரசன், எம்பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக, நேற்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், இன்று முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து உள்ளனர்.

மேலும், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலின் பக்தர்கள் பலரும் தொடர்ந்து பங்காரு அடிகளாரின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்காக மேல்மருவத்தூரில் 2,500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனிடையே, அஞ்சலி செலுத்த வந்த பக்தர்கள் மற்றும் காவல் துறையினருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் தண்ணீர் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், மருத்துவ முகாம்களும் கோயில் நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:பங்காரு அடிகளார் செய்த புரட்சிகள் என்னென்ன?

Last Updated : Oct 20, 2023, 10:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details