தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த ஸ்டாலின் - ஸ்டாலின்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 56.18 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நலத்திட்ட பணிகளை தடங்கி வைத்த முதலமைச்சர்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நலத்திட்ட பணிகளை தடங்கி வைத்த முதலமைச்சர்

By

Published : Dec 17, 2022, 1:21 PM IST

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிசம்பர் 17) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்து சமய அறநிலை துறை சார்பில், 56 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 13 திருக்கோயில்களில் ராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள் அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, வணிக வளாகம், மலைப்பாதை சீரமைத்தல், மதிற்சுவர் கட்டுதல், ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள் கட்டுதல் ஆகிய 16 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை காணொலி காட்சி வாயிலாக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அறநிலையத்துறை சார்பில் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 1 கோடியே 56 லட்சத்து 41 ஆயிரத்து 237 ரூபாய் மதிப்பிலான 19 புதிய வாகனங்களை வழங்கி பயன்பாட்டிற்காக கொடியசைத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:அதிமுகவிலும் வாரிசு அரசியல் செய்யுங்கள்... கே.என். நேரு தடாலடி..

ABOUT THE AUTHOR

...view details