காயிதே மில்லத்தின் 126-ஆவது பிறந்தநாளான இன்று (ஜூன்5), சென்னை திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை போர்த்தி, மலர் தூவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126-ஆம் பிறந்த நாளில் அவர் துயிலிடத்தில் மரியாதை செலுத்தினேன்! இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர்; முத்தமிழறிஞர் கலைஞருடன் நெருக்கமான நட்பு பாராட்டிய தமிழ் வீரர்! அவர் வழியில் மதநல்லிணக்கம் காத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்!’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வண்டலூர் பூங்காவைச் சுற்றிவரும் கரோனா; 2 சிங்கங்கள் கவலைக்கிடம்!