சென்னை:முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் இன்று(ஆக.8) பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பந்தர் கார்டன் அரசு மேல்நிலைப்பள்ளி, லூர்து மேல்நிலைப்பள்ளி, எவர்வின் மேல்நிலைப்பள்ளி, குருகுலம் மேல்நிலைப்பள்ளி, சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, கல்வி உபகரணங்களை முதலமைச்சர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் 135 பயனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி, தையல் இயந்திரங்கள், மூன்று சக்கர சைக்கிள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.