தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் காலமான டைம்ஸ் குழுமத் தலைவர் - மு.க ஸ்டாலின் இரங்கல்! - மு.க ஸ்டாலின் இரங்கல்

டைம்ஸ் குழுமத்தின் தலைவர் இந்து ஜெயின் அம்மையார் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

mk stalin
மு.க ஸ்டாலின் இரங்கல்

By

Published : May 14, 2021, 3:09 PM IST

டைம்ஸ் குழுமத்தின் தலைவர் இந்து ஜெயின் அம்மையார் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்திக் குறிப்பில், இச்செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்து ஜெயின் தமது சேவைகளுக்காக பத்ம பூஷண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றவர் ஆவார். அவரது மறைவு பத்திரிகை உலகிற்கு மட்டுமின்றி சமூக சேவையில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், டைம்ஸ் குழும நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜாவின் சகோதரர் கருணாகரன் மறைவுக்கும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், டி ராஜாவுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details