அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் சீனிவாசன் காலமானார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
'அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் சீனிவாசன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். சென்னை, மதுரை, கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் சிறந்த கண் மருத்துவச் சேவையை வழங்கி வரும் அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் வெங்கடசாமியின் சகோதரரான சீனிவாசன், அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டவர் ஆவார்.