சென்னை: தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு முழுவதும் தை பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.15) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வீடுகளில் வண்ண வண்ண தோரணங்கள் கட்டி, புதுப்பானையில் பொங்கலிட்டு, 'பொங்கலோ.. பொங்கலோ' என மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், சென்னை கொண்டித்தோப்பு காவலர்கள் குடியிருப்பில், காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கலந்துகொண்டு கொண்டாடினார். பின்னர், காவலர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுகைளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.