தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்துகள் - etv bharat

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துர்கா தம்பதியின் (ஆக.20) 44ஆவது திருமண நாளை முன்னிட்டு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலினுக்கு இன்று திருமண நாள்
மு.க.ஸ்டாலினுக்கு இன்று திருமண நாள்

By

Published : Aug 20, 2021, 4:36 PM IST

Updated : Aug 20, 2021, 5:30 PM IST

சென்னை:முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கும் துர்க்காவதிக்கும் கடந்த 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கான அழைப்பிதழ் தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள உம்மிடி பத்மாவதி மண்டபத்தில் இந்த திருமணம் நடைபெற்றது.

அழைப்பிதழ்

அப்போதைய திமுக பொதுச் செயலாளர் நாவலர் தலைமையில், பேராசிரியர் அன்பழகன் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ரூதின் அலி அகமது கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளார்.

திருமண நாள்

மு.க.ஸ்டாலின், துர்கா இருவரும் தங்கள் 44ஆவது திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர். இதையொட்டி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் திமுகவில் இளைஞரணிச் செயலாளர், எம்.எல்.ஏ, கட்சியின் பொருளாளர், உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதலமைச்சர், திமுக தலைவர், முதலமைச்சர் என படிப்படியாக உயர்ந்து வந்தவர்.

தனது குடும்பத்துடன் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின், துர்கா தம்பதியினருக்கு செந்தாமரை என்ற மகளும், உதயநிதி என்ற மகனும் இருக்கின்றனர். தற்போது இவர்களுக்கு, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க:திமுகவின் ஆட்சி கொஞ்சம் இனிப்பு அதிக கசப்பு - அண்ணாமலை

Last Updated : Aug 20, 2021, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details