கோயம்பேடு சந்தையில் கரோனா பெருந்தொற்று அதிகம் பரவியதைத் தொடர்ந்து அச்சந்தை மூடப்பட்டது. இதனால் காய்கறிச் சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற இடம் தேர்வு செய்யப்பட வேண்டியிருந்தது.
திருமழிசையில் சந்தை அமைக்கும் பணி குறித்து முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்
சென்னை: திருமழிசை காய்கறிச் சந்தை அமைக்க மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனையடுத்து, சென்னை அருகே உள்ள திருமழிசை இடம் தேர்வு செய்யப்பட்டு, சந்தை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் குறித்து முதலமைச்சர், தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சண்முகம், காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் கார்த்திகேயன் உள்பட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: சந்தைப்படுத்த முடியாததால் பறவைகளுக்கு உணவான வாட்டர் ரோஸ்!