தீவிரமடைந்துள்ள கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நநேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் சில துறைகள் இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு மற்றும் மத்திய அரசு வெளியிட்ட வழிமுறைகள் குறித்தும், இது தொடர்பாக, தமிழ்நாட்டில் எடுக்கப்படவேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஊரடங்கு வழிமுறை குறித்து முதலமைச்சர் ஆலோசனை! - ஆலோசனை கூட்டம்
சென்னை: ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிமுறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமைச் செயலாளர் சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், முதலமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், முனைவர் எஸ்.விஜயகுமார், பி. செந்தில்குமார், ஜெயஸ்ரீ முரளிதரன், மக்கள் நல்வாழ்வு மற்றும் பொதுச் செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் பார்க்க: தமிழ்நாடு முதலமைச்சருக்கும் விஜயபாஸ்கருக்கும் பனிப்போரா?