சென்னை:தலைமைச் செயலகத்தில், இன்று (ஜூன்.28) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற 69 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் காலஞ்சென்ற திருக்கோயில் பணியாளர் ஒருவரின் வாரிசு தாரர் ஆகியோருக்கு ரூ.2,70,09,752 பணிக்கொடை வழங்கிடும் நிகழ்வு நடைபெற்றது.
அதன் அடையாளமாக 12 ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசு தாரர்களுக்கு பணிக்கொடையும், மயிலாப்பூர்-அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், வல்லக்கோட்டை-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் மாமல்லபுரம்-ஆளவந்தார் அறக்கட்டளை ஆகியவற்றில் பணியாற்றி, பணிக்காலத்தில் இறந்த 3 திருக்கோயில் பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு குடும்பநல நிதியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.