சென்னை:முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போது விதிக்கப்படும் சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளுக்கு விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இது குறித்து நிதி அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடக் கோரி, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
எஸ்.எம்.ஏ அரிய வகை நோய்
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், முதுகெலும்பு தசைக் குறைபாடு (எஸ்.எம்.ஏ) ஒரு அரிய நோயாகும். இது நரம்பு செல்களை செயலிழக்கச் செய்கிறது. இது மூளையில் இருந்து தசைகளுக்கு மின் சமிக்ஞைகளைக் கொண்டு செல்கிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு வயதை எட்டுவதற்கு முன்பு மரபணு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மரபணு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்தின் விலை ஒரு நபருக்கு ரூ.16 கோடிக்கு மேல் செலவாகும் என்று அறியப்படுகிறது. இந்த மருந்துகள் மருத்துவமனை மூலமாக இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஜிஎஸ்டி- சிகிச்சை செலவு அதிகரிக்கும்