தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ் தனி சிறப்பு வார்டை திறந்துவைத்த முதலமைச்சர்! - corona virus special ward

சென்னை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக ஓமந்தூரார் அரசினர் மருத்துவக் கல்லூரியில் 500 படுக்கைகள் கொண்ட தனி சிறப்பு வார்டை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

cm
cm

By

Published : Mar 27, 2020, 10:42 PM IST

கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 உத்தரவு நீட்டிக்கப்பட்டது. கைவிடப்பட்ட மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவக் கல்லூரியில் 500 படுக்கைகள் கொண்ட சிறப்பு தனி படுக்கைகளை முதலமைச்சர் இன்று தொடங்கிவைத்தார்.

கொரோனா வைரஸ் தனி சிறப்பு வார்டை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தனி வார்டுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை 24 மணி நேரமும் கண்கானிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஒரே ரெஸ்பிரேட்டரி கருவியில் இரண்டு நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் 24 மணி நேரமும் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details