தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

500 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்த எடப்பாடி! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: 133 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 500 புதிய பேருந்துகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

TN CM

By

Published : Mar 5, 2019, 7:03 PM IST

ரூ.133 கோடி மதிப்பீட்டில் 500 புதிய பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துக்காக வாங்கப்பட்டது. இந்தப் பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

புதிய பேருந்துகளின் உள்ளே 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது. இப்பேருந்துகள் தமிழகம் முழுவதுமாக பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்பட உள்ளது.

இந்தப் பேருந்துகள் அனைத்தும் குளிர்சாதன வசதியுடனும், 3+2 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details