தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

90 டிஎஸ்பிகளுக்குப் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்! - தமிழ்நாடு அரசு

சென்னை: 2016 முதல் 2019 வரையிலான காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 90 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

cm appointment order  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  காவல் துணை கண்காணிப்பாளர்  தமிழ்நாடு அரசு  tamilnadu cm edapadi palanisamy
90 காவல் துணை கண்காணிப்பாளர் பணிநியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்

By

Published : Jul 27, 2020, 10:01 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (ஜூலை 27) தலைமைச் செயலகத்தில், 2016–2019ஆம் ஆண்டுகளுக்கான காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (குரூப் - 1) மூலமாக தேர்வு செய்யப்பட்ட 90 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்க ஆணையிட்டார்.

இந்நிகழ்வின் அடையாளமாக, 14 நபர்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர், அவர்களது கைகளில் வழங்கினார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில், மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (குரூப் - 1) மூலமாக தேர்வு செய்யப்பட்ட 3 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்வில், தலைமைச் செயலாளர் க. சண்முகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் வழங்கல்!

ABOUT THE AUTHOR

...view details